நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: திருப்புத்துார் பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலர் தனுஷ்கோடியை கைது செய்ததை கண்டித்து சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சம்பவம் அறிய 'சிசிடிவி' பதிவினை வெளியிட வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சங்கரசுப்பிரமணியன் உட்பட சங்க நிர்வாகிகள், பேரூராட்சி அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.