நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: புள்ளியியல் துறையில் 38 தொழில்நுட்ப பணியிடத்தை பறித்திடும் அரசாணை ரத்துகோரி, சிவகங்கையில் புள்ளியியல் துறையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பி.சரவணக்குமார் வரவேற்றார். அரசாணை 118ன் மூலம் முறையற்ற வகையில் 38 தொழில்நுட்ப பணியிடங்களை, அமைச்சு பணியிடங்களாக மாற்றம் செய்தது குறித்து சங்க மாநில செயலாளர் ஏ.சரவணக்குமார் விளக்கம் அளித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் அஷ்ரப் நிஷாபேகம் பேசினர்.