நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:ஊரக வளர்ச்சித்துறையில் புதிய கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அதற்குரிய பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகி ருஷ்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் லதா, பிற்பட்டோர் நலத்துறை ஊழியர் சங்க தலைவர் கோபால், அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் வளனரசு உள்ளிட்டோர் பங்கேற்றன ர். மாவட்ட பொருளாளர் பெரியசாமி நன்றி கூறினார்.