நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் துணை பி.டி.ஓ., பதவி உயர்வு, பணியிட மாறுதலில் விதிமீறலை கண்டித்து பெருந்திரள் முறையீடு கூட்டம் நடத்தினர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார்.
இணை செயலாளர்கள் மாரிமுத்து, திருஞானம், பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் செல்வக்குமார் துவக்கி வைத்தார்.
மாவட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார். பணியிட மாறுதல் ஆவணங்களில் கலெக்டர் கையெழுத்திடும் முன் வெளியிடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

