ADDED : பிப் 12, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடைகளை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இரண்டாம் நாளான நேற்று தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில பொதுச் செயலாளர் விசுவநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். வட்ட தலைவர் ராஜேந்திரன், வட்ட செயலாளர் சரவணன், நிர்வாகிகள், ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்றனர்.
