UPDATED : ஜூலை 21, 2026 04:43 PM
ADDED : ஜூலை 21, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:ஏ.ஐ.டி.யூ.சி., ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன ஆர்ப்பாட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது. நகர் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் ராஜா கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
மாவட்ட தலைவர் காளைலிங்கம், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சகாயம், மாவட்ட துணைத் தலைவர் கருப்புசாமி, மாவட்ட துணை செயலாளர் பாண்டி, மாவட்ட துணைத்தலைவர் பரிசுத்த மங்களசாமி, காரைக்குடி நகர் செயலாளர் தங்கேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
