ADDED : ஜூலை 22, 2026 06:32 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நீட் முறைகேடு மற்றும் மத்திய அரசை கண்டித்து மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் மாரி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார். மகளிர் அமைப்பாளர் லதா, மாவட்ட துணைத் தலைவர் பாண்டி, மாவட்ட இணைச் செயலாளர் சின்னப்பன், பயாஸ் அகமது, கார்த்திக் கலந்து கொண்டனர். திருப்புவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மீனா, தேவகோட்டையில் கண்ணன், காரைக்குடியில் சிவா, சிங்கம்புணரியில் ேஷக் அப்துல்லா, இளையான்குடியில் பழனி, மானாமதுரையில் சிவக்குமார், திருப்புத்துாரில் சின்னையா தலைமை வகித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
