ADDED : செப் 01, 2026 10:02 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை சிவன் கோவில் முன்பு காங்., தலைவர் ராகுல் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார்.
மாவட்ட பார்வையாளர் துரை சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். நகர் தலைவர் விஜயகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சையது இப்ராஹீம், வட்டார தலைவர்கள் உடையார், மதியழகன், வெள்ளைச்சாமி, மோகன்ராஜ், முன்னாள் கவுன்சிலர் சண்முகராஜன், மோகன்ராஜ் கலந்து கொண்டனர்.
