UPDATED : அக் 12, 2026 01:04 AM
ADDED : அக் 11, 2026 04:26 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி: டில்லியில் கம்யூ., நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து காரைக்குடியில் கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டசெயலாளர் மோகன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., நகர் செயலாளர் சிவாஜிகாந்தி, துணை செயலாளர் கோபால், மாவட்ட செயலாளர் காமராஜ், மாதர் சங்க நிர்வாகி மஞ்சுளா, ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, முருகேசன், சுப்பையா பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சி செயற்குழு கருப்புச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
