ADDED : நவ 12, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தொகுப்பூதிய முறையில் பணிபுரியும் 6500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் கிறிஸ்டி பொன்மணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரம்யா கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்ற சங்கத்தின் மாநில செயலாளர் பாண்டி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் தனபால், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ரோகிணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினர். மாவட்ட பொருளாளர் ரஞ்சிதா நன்றி கூறினார்.
