ADDED : நவ 25, 2026 04:25 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் இருந்து சூரக்குளம் வழியாக ஒக்கூர் வரை அரசு பஸ் வசதி கேட்டு 9 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திருப்புத்துார் ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்தி கம்யூ., மாவட்ட செயலாளர் மருது தலைமை வகித்தார். நகர் செயலாளர் சகாயம், தி.மு.க., மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக், குமணன், மலைச்சாமி முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் கோரிக்கையை விளக்கி பேசினார். கம்யூ., ஒன்றிய செயலாளர் பன்னீசெல்வம் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
