தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருபுவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்ற மறுப்பு: மக்கள் தவிப்பு

திருபுவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்ற மறுப்பு: மக்கள் தவிப்பு

திருபுவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்ற மறுப்பு: மக்கள் தவிப்பு


UPDATED : அக் 12, 2026 01:02 AM

ADDED : அக் 12, 2026 12:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 01:02 AM ADDED : அக் 12, 2026 12:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புவனம்: மதுரை எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்திக்கு செல்லும் பயணிகளை இரவில் பஸ்களில் ஏற்ற மறுப்பதால் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல் வழியாக கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த வழித்தடத்தில் இரவு முழுவதும் விடிய விடிய பஸ் வசதி உண்டு. மதுரைக்கு பணி நிமித்தமாக செல்பவர்கள் பலரும் மதுரை எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டிற்கு வந்து தொலை தூர பஸ்களில் ஏறி சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

மதுரை பஸ் ஸ்டாண்டில் இருந்து இரவு 9:00 மணிக்கு மேல் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்ற கண்டக்டர், டிரைவர்கள் மறுப்பதோடு, பயணிகளை அவதுாறாகவும் பேசுகின்றனர். மதுரையில் உள்ள அனைத்து பஸ்களிலும் பரமக்குடி, ராமநாதபுரம் செல்லும் பயணிகளை மட்டுமே ஏற்றுகின்றனர்.

மதுரை - - ராமநாதபுரம் இடையே உள்ள முக்கிய நகரங்களான திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். இது குறித்து பல முறை போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் இரவில் பெண்கள், முதியோர் நீண்ட நேரம் காத்துக்கிடந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பயணிகள் கூறியதாவது, ஒன் டூ ஒன், ஒன் டூ த்ரீ, பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்கள் தவிர மற்ற அனைத்து பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். இரவில் எந்த பஸ்சிலும் இடை நிறுத்த பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர்.

தினமும் கண்டக்டர்கள் அலுவலகத்தில் செலுத்தும் 'இன்வாய்ஸ்' புத்தகத்தை ஆய்வு செய்தாலே திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்றி செல்லாதது தெரியும்.

ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மதுரை எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் விடிய விடிய காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை பஸ்சில் ஏற்ற மறுக்கும் கண்டக்டர், டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us