/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விதை விற்பனை சட்டப்படி நாற்றங்கால்: துணை இயக்குனர்
/
விதை விற்பனை சட்டப்படி நாற்றங்கால்: துணை இயக்குனர்
விதை விற்பனை சட்டப்படி நாற்றங்கால்: துணை இயக்குனர்
விதை விற்பனை சட்டப்படி நாற்றங்கால்: துணை இயக்குனர்
ADDED : பிப் 18, 2025 05:01 AM
சிவகங்கை: நாற்றங்கால் மற்றும் விதை விற்பனை செய்பவர்கள் உரிய சட்டப்படி விற்க வேண்டும் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் இப்ராம்ஷா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் பழமரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால் உரிமையாளர்கள் எந்த விதையின் மூலம் அல்லது ஒட்டு மூலம் உற்பத்தி செய்கிறார் என்ற தகவலை கட்டாயம் பராமரிக்க வேண்டும்.
நாற்றங்காலில் விற்பனை செய்யப்படும் அனைத்து பழ மரக்கன்றுகள், தென்னை நாற்றுகள், பணப்பயிர் மரக்கன்றுகளில் உண்மை தன்மை அட்டையில் நாற்றங்கால் உரிமையாளர் கையெழுத்துடன் விதைச்சட்டம் 1966ல் கூறியபடி முத்திரை எண், பயிர், ரகம், பதியம் செய்த நாள், குவியல், கன்று எண், நாற்றங்கால் ஆகியவற்றை குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும்.
குழித்தட்டுகளில் விற்பனை செய்யும் காய்கறி பயிர்களின் நாற்றுகளின் தரம் மற்றும் ஆதாரத்தை உறுதி செய்திட குழித்தட்டுகளில் ரகம் மற்றும் வீரிய ரகங்களின் விதை குறித்த தகவல்களை உள்ளடக்கிய உண்மை தன்மை அட்டை பொருத்தி விற்பனை செய்ய வேண்டும். இந்நடைமுறைகளை பின்பற்றி தரமான பழமரக்கன்றுகள் மற்றும் குழித்தட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி நாற்றுகளை மட்டுமே விவசாயிக்கு வழங்க வேண்டும்.
இதற்கான விற்பனை ரசீது கட்டாயம் தர வேண்டும். விதை விற்பனை லைசென்ஸ் பெற்று, விதை சட்டங்களை கடைபிடிக்க வேண்டும். இந்நடைமுறைகளை பின்பற்றாத நாற்றங்கால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

