/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின் விளக்கு இல்லாத பாலம் இருளில் தேவகோட்டை ரஸ்தா
/
மின் விளக்கு இல்லாத பாலம் இருளில் தேவகோட்டை ரஸ்தா
ADDED : நவ 15, 2024 06:57 AM
காரைக்குடி: காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா மேம்பாலத்தில் எச்சரிக்கை பலகை, மின்விளக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை தேவகோட்டை, அமராவதி புதுார் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் உள்ளது.
ரயில்வே கேட் மூடப்படும் போது, நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்து நிற்கும் அவலம் நிலவியது.
இதனைத் தொடர்ந்து, தேவகோட்டை ரஸ்தா பகுதியில் ரயில்வே மேம்பால பணி முடிவடைந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
ஓராண்டை நெருங்கி உள்ள நிலையில் இதுவரை பாலத்தில் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. தவிர பாலம் மற்றும் நெடுஞ்சாலையில் எந்த ஒரு எச்சரிக்கை பலகையோ, ஊர்ப்பெயர் பலகையோ அமைக்கப்படவில்லை. மேம்பாலத்தில் விளக்குகள் இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வருகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.