/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை ட்ருவே நிதி நிறுவனத்தின் அலுவலகம், இயக்குனர் வீடுகளுக்கு சீல்
/
தேவகோட்டை ட்ருவே நிதி நிறுவனத்தின் அலுவலகம், இயக்குனர் வீடுகளுக்கு சீல்
தேவகோட்டை ட்ருவே நிதி நிறுவனத்தின் அலுவலகம், இயக்குனர் வீடுகளுக்கு சீல்
தேவகோட்டை ட்ருவே நிதி நிறுவனத்தின் அலுவலகம், இயக்குனர் வீடுகளுக்கு சீல்
ADDED : செப் 25, 2024 01:33 AM

தேவகோட்டை:.பல கோடி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ட்ருவே நிதி நிறுவனத்தின் அலுவலகம், அதன் இயக்குனர் வீடுகளுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
தேவகோட்டை அழகாபுரிநகர் மேற்குத் தெருவில் விஜயராகவன், அண்ணாசாலை வள்ளலார் தெரு அருண்குமார் மற்றும் சிலர் இயக்குநர்களாக இணைந்து 'ட்ருவே நிதி நிறுவனம் நடத்தினர். அதிக வட்டி ஆசையால் தேவகோட்டை மட்டுமின்றி பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். நகை சிறு சேமிப்பு பெயரிலும் பணம் வசூலித்தனர். இந்நிதியில் பல இடங்களில் கம்பி மொத்த வியாபாரமும் இயக்குனர்கள் செய்து வந்தனர். மற்றொரு நிதி நிறுவன மோசடி காரணமாக பணம் செலுத்தியவர்களுக்கு வட்டி வராததால் ட்ருவே நிறுவனத்தின் மீதும் சந்தேகம் எழுந்தது.
நான்கு மாதங்களுக்கு முன்பு கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து முதலீடு செய்தவர்கள் தேவகோட்டை திருப்பத்துார் ரோடு அலுவலகத்தில் திரண்டு முதலீடு பணத்தை திரும்ப கேட்டனர். பணியாளர்கள் மட்டுமே பதிலளித்த நிலையில் இயக்குனர்கள் வரவில்லை. இதற்கிடையில் இயக்குனர்கள் தலைமறைவாகினர். இதனால் முதலீடு செய்தவர்கள் அவர்களின் வீடுகளுக்கு பூட்டு போட்டனர்.
ட்ருவே நிறுவன மோசடி குறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் சென்றன. சில நாட்களுக்கு முன் விஜயராகவன், அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று போலீசார் தேவகோட்டை நிதி நிறுவன தலைமை அலுவலகம், மேலும் மூன்று அலுவலகம், அழகாபுரி நகரிலுள்ள விஜயராகவன் மற்றும் அருண்குமார் வீடுகளில் வருவாய்த்துறையினர் முன்னிலையில் பூட்டுக்களை உடைத்து சோதனை நடத்தினர். இதில் முதலீடுகள் விவரம், இடங்களை கைமாற்றியது, நிதி செலுத்தியவர் விபரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். பின் அலுவலகங்கள், வீடுகளுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.