ADDED : ஆக 21, 2026 12:14 AM

அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டையில் உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்ட் கால்நடைகளின் கூடாரமாக மாறி விட்டதாக புகார் எழுந்துள்ளது.
தேவகோட்டை ராம்நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே காரைக்குடி மெயின் ரோட்டில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் சுமார் ஓராண்டாக செயல்படுகிறது. இந்த பஸ் ஸ்டாண்டில் மாடுகள் அதிகளவு திரிகின்றன.
மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை தற்காலிக பஸ் ஸ்டாண்ட் கால்நடைகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதன் காரணமாக அதிகாலையில் பஸ்கள் பெரும்பாலும் பஸ் ஸ்டாண்ட் உள் பகுதிக்குள் செல்லாமல் ரோட்டிலேயே நின்று செல்கின்றன.
தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதும் 220க்கும் மேற்பட்ட மாடுகள் குவிந்து கிடக்கின்றன.
