/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அவலம் தேவகோட்டை தியாகிகள் பூங்காவிற்கு பூட்டு கொளுத்தும் வெயிலில் இளைப்பாற இடமில்லை
/
அவலம் தேவகோட்டை தியாகிகள் பூங்காவிற்கு பூட்டு கொளுத்தும் வெயிலில் இளைப்பாற இடமில்லை
அவலம் தேவகோட்டை தியாகிகள் பூங்காவிற்கு பூட்டு கொளுத்தும் வெயிலில் இளைப்பாற இடமில்லை
அவலம் தேவகோட்டை தியாகிகள் பூங்காவிற்கு பூட்டு கொளுத்தும் வெயிலில் இளைப்பாற இடமில்லை
ADDED : ஏப் 17, 2025 05:42 AM

தேவகோட்டை: வரலாற்று புகழ் வாய்ந்த தேவகோட்டை தியாகிகள் பூங்கா பராமரிப்பின்றி பூட்டப்பட்டு கிடக்கிறது. -
தேவகோட்டையில் 1926 ல் ஆங்கிலேயர் காலத்தில் நகரின் மையத்தில் அமைக்கப்பட்டது இந்த பூங்கா. மறைந்த சுதந்திர போராட்ட வீரர்கள் நினவாக ஸ்துாபி அமைக்கப்பட்டு அப்போது முதல் தியாகிகள் பூங்கா என அழைக்கப்படுகிறது.பூங்காவில் நிழல் தரும் மரங்கள்,அழகான பூஞ்செடிகள், பொழுது போக்க இருக்கை,குடிநீர் இணைப்பு,ரேடியோ,டி.வி., நான்கு புறமும் வழிகள் என பூங்கா பொலிவுடன் பராமரிக்கப்பட்டு வந்தது.
பஸ் ஸ்டாண்ட் அருகிலும், நகரின் மையத்திலும் இருப்பதால் அருகில் உள்ள கிராமத்தினர் தங்கள் வந்த பணிகள் தாமதமானால் இந்த பூங்கா நிழலில் இளைப்பாறுவார்கள். சரித்திர புகழ் வாய்ந்த இந்த பூங்காவை சுதந்திர, குடியரசு தினத்திற்கு என இரண்டு தினங்கள் மட்டும் காங். கட்சியினர் திறந்து கொடியேற்று கின்றனர். அவ்வளவு தான்.
பூங்காவிற்கு பூட்டு:
தற்போது இந்தப் பூங்கா பராமரிப்பின்றி குப்பையாக காணப்படுகிறது, சுத்தம் செய்வதில்லை. பூங்காவை இழுத்து பூட்டி விட்டனர். புனிதமான பூங்கா இன்று அலங்கோலமாக காணப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிகாலையில் பூங்கா அருகில் மது விற்கப்படுகிறது.மது அருந்திவிட்டு பாட்டில்களை பூங்காவிற்குள் வீசி செல்கின்றனர்.
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கிராமத்தினர் இளைப்பாற இடமின்றி தவிக்கின்றனர். வெயில் அதிகரித்து வரும் நிலையில் பஸ் ஸ்டாண்ட் முதல் நகராட்சி வரை வெயிலை சற்று தணிக்க பச்சை வலை கட்ட நகராட்சியினர் ஆலோசித்து வரும் நிலையில் இந்த பூங்காவையும் சற்று கவனிக்க வேண்டும். தினமும் சுத்தம் செய்து பூங்காவில் தண்ணீர் தெளித்து, மக்கள் தாகம் தீர்க்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பூச்செடிகள் , மரங்களை சீரமைத்து பராமரிக்க வேண்டும். நகராட்சி அலுவலகத்திற்கு நேரே ஏற்கனவே இருந்த வாசலை மீண்டும் திறக்க வேண்டும்.