ADDED : மார் 17, 2026 05:19 AM
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சியில் கடந்த அக்டோபர் முதல் நகராட்சி கமிஷனர் பணியிடம் காலியாகவே உள்ளது. வேறு நகராட்சி கமிஷனரே பொறுப்பு வகித்து வருகின்றார். நகராட்சி திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பொறுப்பு கமிஷனர் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தான் வருகின்றார். தற்போது ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதா தான் பொறுப்பு கமிஷனராக உள்ளார். பதினைந்து தினங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை கமிஷனர் மாறுதல் செய்து நியமனம் உத்தரவு வந்தது. ஆனால் அவர் பணியில் சேராமல் லீவில் சென்று விட்டார். மீண்டும் ராமநாதபுரம் கமிஷனரே பொறுப்பு கமிஷனராக உள்ளார். தேர்தல் நேரத்தில் ஓட்டு சாவடிகள் பராமரிப்பது உட்பட அவசர பணிகள் செய்ய வேண்டிய நிலையில் நிரந்தர கமிஷனர் இல்லை.
உயர் அதிகாரிகள் உடனடியாக நிரந்தர கமிஷனரை நியமிக்க வேண்டும்.
