ADDED : ஜன 02, 2025 11:43 PM
தேவகோட்டை; தேவகோட்டை ஒன்றிய கூட்டம் தலைவர் பிர்லா கணேசன் ( அ.தி. மு.க.) தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ராசாத்தி ( அ.தி.மு.க.) கமிஷனர் பாஸ்கரன் பி.டி.ஓ . சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார் ( தி.மு.க.) பங்கேற்றார். அலுவலர் கருப்பசாமி தீர்மானங்களை வாசித்தார்.
தலைவர்: 5 ஆண்டுகளில் மாவட்ட அளவில் 12 ஒன்றியங்களில் திட்டப்பணிகள் அதிகளவிலும், சிறப்பாக செயல்பட்டு மாவட்டத்தில் முதன்மையான ஒன்றியமாக தேவகோட்டை உள்ளது பெருமையாக இருக்கிறது. மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்திலும் முதன்மை. கடந்த ஆண்டில் மாவட்டத்தில் ரூ 40கோடியில் நமது ஒன்றியத்தில் மட்டும் ரூ 20 கோடிக்கு பணி செய்துள்ளோம்.
மாவட்ட கவுன்சிலர்: கட்சி பேதமின்றி நிதி ஒதுக்கி திட்ட பணிகள் நிறைவேற்றி உள்ளோம்.
கமிஷனர்: ஒன்றிய அலுவலர்களிடம் சிறப்பாக இணக்கமாக இருந்து பணிகளை நல்ல முறையில் செயல்படுத்த ஒத்துழைப்பு நல்கிய ஒன்றிய தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் அனைவருக்கும் அலுவலர்கள் சார்பில் நன்றி என்றார்.

