தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஸ்டேடியம் இல்லாத தேவகோட்டை

 ஸ்டேடியம் இல்லாத தேவகோட்டை

 ஸ்டேடியம் இல்லாத தேவகோட்டை


ADDED : ஜன 31, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை, முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்று நான்கரை ஆண்டுகளை கடந்து விட்டது. தேவகோட்டை பகுதிக்கென புதிதாக அறிவிப்பு , திட்டம் நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் உள்ளது. வழக்கமான ரோடு, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகள் தான் நடக்கிறது.

தேவகோட்டை மாணவர்கள் ஆசியாட், பாரா ஒலிம்பிக் உட்பட பல விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளனர். தற்போது அகில இந்திய அளவில் தடகள போட்டியில் தங்கம் வென்று வருகின்றனர்.

சாதாரண பள்ளி விளையாட்டு மைதானங்களில், கிராமத்து பொட்டல்களில் விளையாடி பயிற்சி பெற்றவர்கள் தான் இவர்கள். முறையான பயிற்சி பெற்று சாதனை படைக்க விளையாட்டு மைதானம் , பயிற்சி கூடம் இல்லை.

தேவகோட்டையில் அரசு இடங்கள் அதிகம் இருக்கின்றன. விளையாட்டு மைதானம் அமைத்து பல போட்டிகளை நடத்தும் அளவிற்கு ஸ்டேடியம் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us