ADDED : அக் 31, 2024 01:27 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. சீரணி அரங்கம் முன் அமைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு தேவர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து கொடி ஏற்றினர்.
நேதாஜி நகரில் தேவர் படம் முன்பாக பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிங்கம்புணரி பேருராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் செந்தில், தேவர் பேரவை தலைவர் இளம்பரிதி, செயலாளர் கென்னடி, பொருளாளர் சேக்கி அம்பலம், ஐந்து நிலை நாட்டு மறவர் பேரவை தலைவர் குணசேகரன், ஜெயந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காரைக்குடி
காரைக்குடியில் காங்., சார்பில் மாங்குடி எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள் தொண்டர்கள் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துத்துரை, பிரபு டெண்டல் மருத்துவமனை டாக்டர். பிரபு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு வல்லம்பர் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காரைக்குடி அண்ணாநகர், காளையப்பா நகர், தேவர் குடியிருப்பு, இலுப்பக்குடி, சாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மானாமதுரை
மானாமதுரையில் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஏ.விளாக்குளம் கிராம மக்கள் பால்குடம் ஏந்தி கிராமத்திலிருந்து மானாமதுரை தேவர் சிலைக்கு ஊர்வலமாக வந்து பாலாபிஷேகம் செய்தும்,சிலைக்கு முன் பொங்கல் வைத்தும் வழிபட்டனர். சிலைக்கு முன் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மானாமதுரை சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

