/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பழநி தைப்பூச சிறப்பு ரயில் இயக்க பக்தர்கள் கோரிக்கை
/
பழநி தைப்பூச சிறப்பு ரயில் இயக்க பக்தர்கள் கோரிக்கை
பழநி தைப்பூச சிறப்பு ரயில் இயக்க பக்தர்கள் கோரிக்கை
பழநி தைப்பூச சிறப்பு ரயில் இயக்க பக்தர்கள் கோரிக்கை
ADDED : ஜன 25, 2025 06:48 AM
காரைக்குடி : காரைக்குடியில் இருந்து தைப்பூசத்தை முன்னிட்டு சிவகங்கை மானாமதுரை மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துஉள்ளது.
தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி திராவிடமணி கூறுகையில், பழநி தைப்பூசத்திற்கு, காரைக்குடி தேவகோட்டை சிவகங்கை உட்பட பல்வேறு சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரையாகவும், காவடி துாக்கிக் கொண்டு பஸ்களிலும் பயணம் செல்கின்றனர்.
பிப்.11, 12 பழநி தைப்பூசத்தை ஒட்டி பக்தர்கள் பழநிக்கு சென்று வர காரைக்குடி தேவகோட்டை சிவகங்கை வழியாக இரண்டு நாட்களுக்கு முன்பே ரயில்கள் இயக்க வேண்டும்.
2016ம் ஆண்டு தைப்பூசத்திற்கு இரண்டு நாட்களுக்கு காரைக்குடியிலிருந்து சிவகங்கை மானாமதுரை-மதுரை- திண்டுக்கல் வழியாக ரயில் இயக்கப்பட்டது.
எனவே பிப்.9, 10, 11 மற்றும் 12 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

