ADDED : பிப் 21, 2026 07:03 AM

மானாமதுரை: மானாமதுரையில் வழிவிடும் முருகன் கோயில் எதிரே ரோட்டை மறைத்து மந்தகதியில் குழாய் பதிக்கும் பணி நடப்பதால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதற்கு சிரமப்பட்டனர்.
இக்கோயிலில் முகூர்த்த நாட்களில் அதிக திருமணம் நடைபெற்று வருகிறது.கடந்த ஒரு மாதமாக கோயிலுக்கு எதிரே காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி மிகவும் மந்தக் கதியில் நடைபெற்று வருகிறது.
3 நாட்களாக கோயிலை ஒட்டிய ரோட்டை மறைத்து பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாதவாறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று முகூர்த்த நாள் என்பதால் வழிவிடும் முருகன் கோயிலில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்ற நிலையில் கோயிலுக்கு முன் தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வைக்காததால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.
காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் கோயிலுக்கு முன் நடைபெறும் பணியையும்,நகர் பகுதிக்குள் நடைபெறும் பிற பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
