UPDATED : செப் 02, 2026 05:08 PM
ADDED : செப் 02, 2026 05:03 PM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே சாலைப் பழுதால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இப்பேரூராட்சி அருகே தல்லம்பாறை செல்லும் சாலை 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது இச்சாலையில் கற்கள் பெயர்ந்து நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. இதனால் இவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். இங்குள்ள தல்லம்பாரி ஐயனார் கோயிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் அவர்களும் கற்களில் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இச்சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
