/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுவாமிமலைக்கு காவடி எடுத்த பக்தர்கள்
/
சுவாமிமலைக்கு காவடி எடுத்த பக்தர்கள்
ADDED : டிச 08, 2024 06:19 AM

காரைக்குடி காரைக்குடியில் இருந்து ஆண்டுதோறும் திருக்கார்த்திகையை முன்னிட்டு நகரத்தார் சுவாமிமலை பாதயாத்திரை டிரஸ்ட் மூலம் பக்தர்கள் காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.
இவ்வாண்டு, திருக்கார்த்திகையை முன்னிட்டு காவடி எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. டிச. 6ம் தேதி காரைக்குடி நா. புதுார் நகரச் சிவன் கோயிலில் காவடி கட்டுதல் நிகழ்ச்சியும் வேல் பூஜையும் நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணியர், தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை காவடிகளுடன் நகர்வலம் வந்து கொப்புடைய நாயகியம்மன் கோயிலில் காவடிகளை இறக்கி வைத்து வேல் பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், காவடிகள் சுவாமிமலைக்கு புறப்பட்டது. டிச.12 ஆம் தேதி காலை, சுவாமிமலையில் காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.