/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தை அமாவாசையில் வழிபட்ட பக்தர்கள்
/
தை அமாவாசையில் வழிபட்ட பக்தர்கள்
ADDED : ஜன 30, 2025 05:30 AM

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி வழிபட்டனர்.
காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலமாக திருப்புவனம் கருதப்படுகிறது. வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி வழிபட்ட பின் புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்து செல்வது ஹிந்துக்களின் வழக்கம். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றினுள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கினர்.
பக்தர்கள் வசதிக்காக நான்கு மாட வீதிகளிலும் வாகனங்களை அனுமதிக்காமல் போலீசார் கட்டுப்பாடு விதித்தனர். இதனால் பக்தர்கள் சிரமமின்றி சென்று வந்தனர்.
* மானாமதுரை, இளையான்குடியில் தை அமாவாசை முன்னிட்டு ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மானாமதுரை வைகை ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
*இளையான்குடி அருகே உள்ள குருச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் மானாமதுரை பரமக்குடி இளையான்குடி மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் காசி சிவனுக்கு கங்கா தீர்த்தம் விட்டு வழிபாடு செய்தனர்.