/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தனுஷ்கோடி டூ கன்னியாகுமரி சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம்; இலுப்பக்குடியில் வீரர்களுக்கு வரவேற்பு

ADDED : ஜூலை 16, 2025 01:24 AM
சிவகங்கை: தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்ற இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு இலுப்பக்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை போலீஸ் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., ஜஸ்டின் ராபர்ட் ஆலோசனைபடி படைப்பிரிவு எஸ்.ஐ.,க்கள், வீரர்கள் என 25 பேர் துணை ராணுவ படையில் தமிழக இளைஞர்களை அதிகளவில் சேர செய்வது. போதை பொருளால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு அளித்தல் போன்றவற்றை வலியுறுத்தி ஜூலை 8 ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் சைக்கிள் ஊர்வலத்தை துவக்கினர்.
தனுஷ்கோடியில் துவங்கிய சைக்கிள் ஊர்வலம் கன்னியாகுமரிக்கு ஜூலை 12 ல் சென்று சேர்ந்தது. சைக்கிள் ஊர்வலத்தை முடித்து, இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீஸ் பயிற்சி மையத்திற்கு வந்த வீரர்களுக்கு கமாண்டன்ட் சந்திரன், துணை கமாண்டன்ட் ராகுல் சிங் ரானா ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.