/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சேதமடைந்த கிராம சாலையில் வாகனங்கள் செல்வதில் சிக்கல்
/
சேதமடைந்த கிராம சாலையில் வாகனங்கள் செல்வதில் சிக்கல்
சேதமடைந்த கிராம சாலையில் வாகனங்கள் செல்வதில் சிக்கல்
சேதமடைந்த கிராம சாலையில் வாகனங்கள் செல்வதில் சிக்கல்
ADDED : செப் 20, 2024 06:56 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே நைனாங்குளம் கிராமத்தில் இருந்து துக்கால் ஆத்துார் கிராமம் வழியாக செல்லக்கூடிய சாலை சேதமடைந்துள்ளதால் டூவீலரில் கூட செல்ல முடியாமல் கிராம மக்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை அருகே நைனாங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையானது முழுவதும் சேதமடைந்துள்ளது. இந்த சாலையானது கீழக்குளம் வழியாக களத்துார் பெரியகோட்டை செல்லும் சாலையில் இருந்து பிரிந்து துக்கால், அரசனி, நைானங்குளம் வழியாக மதுரை தேசிய நெடுஞ்சாலையை அடைகிறது.
இந்தசாலையில் 3 கி,மீ., துாரத்திற்கு கடந்த 24 வருடத்திற்கு முன்பு அப்போதைய அமைச்சர் தா.கிருஷ்ணன் கிராமப்புற சாலைகள் திட்டத்தில்ரூ.33 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் போடப்பட்டது.
இந்த சாலை அமைக்கப்பட்ட பிறகு பராமரிப்பு என்பதே இல்லை. சாலை முழுவதும்சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த பகுதியில் இருந்து மாணவர்கள் சைக்கிளில் தான் சிவகங்கை செல்கின்றனர். அவர்கள் செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கிராமங்களுக்கு அவசரத்திற்கு ஆட்டோக்கள், ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட சிரமப்படுகின்றன. 20 ஆண்டுகளாக தொடந்து இந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் சாலை சீரமைக்கப்படவில்லை.
மாவட்ட நிர்வாகம் 3 கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு சேதம் அடைந்துள்ள சாலையை சீரமைத்து புது தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.