தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பாழடைந்த பள்ளி கட்டடம்

 பாழடைந்த பள்ளி கட்டடம்

 பாழடைந்த பள்ளி கட்டடம்


ADDED : டிச 21, 2025 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2025 06:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கிராம அரசு பள்ளி கட்டடம் சேதமடைந்து மூன்று ஆண்டுகளாகியும் இன்று வரை அப்புறப்படுத்தப்படாததால் மாணவ, மாணவியர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

மாரநாடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுடன் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

மாரநாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்ததால் மாணவ, மாணவியர் வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டு சேதமடைந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்று வரை கட்டடம் அப்புறப்படுத்தப்படவில்லை.

சேதமடைந்த கட்டடத்தை கடந்து தான் பள்ளிக்கு மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். கட்டடத்தை ஒட்டிய சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்த நிலையில் ஆடு, மாடு என பலவும் பள்ளி வளாகத்தில் வலம் வருவதுடன் அவற்றின் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் நிலவி வருகிறது. பலமுறை கிராமமக்கள் புகார் கொடுத்தும் இன்று வரை கட்டடம் இடித்து அப்புறப்படுத்தப்படவில்லை.

மாவட்ட நிர்வாகம் பழைய கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us