தினமலர் பட்டம் வாசகர் வட்டம் சார்பில் வாசிக்கலாம் பயிலரங்கம்
தினமலர் பட்டம் வாசகர் வட்டம் சார்பில் வாசிக்கலாம் பயிலரங்கம்
UPDATED : அக் 15, 2026 05:11 PM
ADDED : அக் 15, 2026 04:54 PM

தேவகோட்டை: தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் தினமலர் நாளிதழ் பட்டம் மாணவர் பதிப்பின் வாசகர் வட்டம் , இளமைகனல் எழுத்தாளர் இயக்கம், பாவாணர் வாசிப்பு இயக்கம் சார்பில் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு வாசிக்' கலாம் ' பயிலரங்கம் பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா தலைமையில் நடந்தது.
வாசிப்பு இயக்க செயலாளர் தினமலர் பட்டம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஸ்டீபன் மிக்கேல் ராஜ் வரவேற்றார். வாசிப்பு இயக்க தலைவர் சேவியர் ராஜா வாசிப்பின் அவசியம் பற்றியும், பட்டம் நாளிதழின் சிறப்பம்சங்களையும் விளக்கினார். மனித வள பயிற்றுநர் முருக பாரதி அப்துல்கலாம் பற்றியும், இன்றைய சூழலில் வாசிப்பு அத்தியாவசியம் பற்றியும் பேசினார். தினமலர் பட்டம் மாணவர்கள் விழாவை தொகுத்து வழங்கினர். எழுத்தாளர் இயக்க பொறுப்பாசிரியர் பிலவேந்திர ராஜா நன்றி கூறினார். பட்டம் மாணவர்களுக்கு கலாம் எழுச்சி உரைகள் புத்தகங்களை வழங்கினர்.
