ADDED : ஜன 18, 2025 07:34 AM
சிங்கம்புணரி:
தினமலர் செய்தி எதிரொலியாக பழுதடைந்த கண்மாய் மடை சீரமைக்கப்பட்டு, தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது.
ஜெயங்கொண்டநிலை அருகே 80 ஏக்கர் பரப்புஉள்ள கருமாத்துார் கண்மாய், நிரம்பி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் பாசன நிலங்களுக்கு திறக்கப்படும் மடையில் பழுது ஏற்பட்டது. இதனால் தண்ணீர் கசிந்து வீணானது.
அதை அடைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். அப்பகுதியில் பெரிய அளவில் விவசாயம் நடைபெறவில்லை என்றாலும் இக்கண்மாயில் தண்ணீர் தேங்கி இருந்தால் நிலத்தடி நீர்மட்டத்தை தக்க வைக்கவும், கால்நடைகளின் குடிநீருக்கும் உதவுவதாக இருக்கும். ஆனால் உடைப்பு காரணமாக முழு கண்மாய் தண்ணீரும் வெளியேறிவிடும் ஆபத்து ஏற்பட்டது.
இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுத்தனர்.