/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தினமலர் செய்தி எதிரொலி பாலம் சீரமைப்பு பணி துவக்கம்
/
தினமலர் செய்தி எதிரொலி பாலம் சீரமைப்பு பணி துவக்கம்
தினமலர் செய்தி எதிரொலி பாலம் சீரமைப்பு பணி துவக்கம்
தினமலர் செய்தி எதிரொலி பாலம் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : நவ 18, 2025 04:09 AM

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே டி.வேளாங்குளம் செல்லும் வழியில் பாலம் சேதமடைந்து இருப்பதால் கிராமத்திற்கு செல்லும் டவுன் பஸ் நிறுத்தப் பட்டதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தை சரி செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.
டி.வேளாங்குளம் கிராமத்தில் 600 வீடுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினசரி மதுரை செல்ல அரசு டவுன் பஸ்சை நம்பியே உள்ளனர். திருப்பாச்சேத்தியில் இருந்து டி.வேளாங்குளம் செல்லும் வழியில் வரத்து கால்வாய் மேல் 40 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட சிமென்ட் குழாய் பாலம் சேதமடைந்ததால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மூன்று கி.மீ., நடந்து திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் காத்திருந்து பஸ் ஏறி சென்று வந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சேதமடைந்த குழாய் பாலத்தை அகற்றி விட்டு புதிய சிமென்ட் குழாய்கள் பதித்து பாலத்தை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. ஓரிரு நாட்களில் பணிகள் முடிவடைந்து பஸ் போக்குவரத்து துவங்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

