/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தினமலர் செய்தி எதிரொலி; கத்தரி செடிகளில் ஆய்வு
/
தினமலர் செய்தி எதிரொலி; கத்தரி செடிகளில் ஆய்வு
ADDED : ஏப் 30, 2025 06:21 AM

திருப்புவனம்; திருப்புவனம் வட்டாரத்தில் கத்தரி செடியில் நோய் தாக்குதல் குறித்து தினமலரில் செய்தி வெளியானதை அடுத்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் சொக்கநாதிருப்பு, அல்லிநகரம், கலியாந்துார், பனையனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தாண்டு கத்தரிக்காய் செடியில் ஒரே நேரத்தில் மூன்று நோய் தாக்கியதால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து தோட்டக் கலைத் துறை உதவி இயக்குனர் ஷர்மிளா, தோட்டக்கலை அலுவலர் மாளவிகா உள்ளிட்டோர் நோய் பாதித்த கத்தரி செடிகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
கத்தரி செடிகளில் சிறு இலை நோய் தாக்கியுள்ளது. நோய் தாக்கிய செடிகளை அகற்ற வேண்டும், போதிய இடைவெளி விட்டு செடிகளை நடவு செய்திருக்க வேண்டும், மீத்தில் டெமட்டன் மருந்தை ஒரு லிட்டருக்கு இரண்டு மி.லி., வீதம் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும்.
டிரைக்கோ டெர்மா விர்டி உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்த பின் நடவு செய்தால் கத்தரி செடியில் சிறு இலை நோய் தாக்காது என தெரிவித்தனர்.

