/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கஞ்சா பறிமுதல் திண்டுக்கல் வாலிபர் கைது
/
கஞ்சா பறிமுதல் திண்டுக்கல் வாலிபர் கைது
ADDED : பிப் 12, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கை மருத்துவக்கல்லுாரி பின் பகுதியில் மதுவிலக்கு எஸ்.ஐ., ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு சந்தேக படும்படியாக நின்றவர் அவர்களை பார்த்ததும் ஓடத்தொடங்கினார்.
அவரை பிடித்து விசாரித்ததில் அவர் திண்டுக்கல் மாவட்டம் மருதங்குளம் கணேசன் மகன் விக்னேஷ் 29 என்பதும்,விற்பனைக்காக பஸ்சில் கொண்டுவந்த 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

