/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு : களப்பணியாளருக்கு கையடக்க கருவி
/
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு : களப்பணியாளருக்கு கையடக்க கருவி
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு : களப்பணியாளருக்கு கையடக்க கருவி
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு : களப்பணியாளருக்கு கையடக்க கருவி
ADDED : செப் 04, 2025 11:44 PM
சிவகங்கை:மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்த 160 கள பணியாளர்களுக்கு கையடக்க கணினியை கலெக்டர் பொற்கொடி வழங்கினார்.
மாவட்ட அளவில் வீடு தோறும் ஆய்வுக்கு சென்று, அங்கு மாற்றுத்திறனாளிகள் இருந்தால், அவர்களுக்கு அரசு சார்ந்த மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, உப கரணங்கள் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வீட்டில் மாற்றுத் திறனாளியாக இருந்து பதிவு செய்யாமல் விட்டு போனவர்கள் குறித்த விபரங்களை கையடக்க கணினியில் சேகரித்து, அவர்களுக்கு அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான கருவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்ட அளவில் 160 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்டத்தின் கீழ் வீடு தோறும் சென்று அவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்க கையடக்க கணினியை கலெக்டர் பொற்கொடி வழங்கினார்.
விழாவில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், மாவட்ட திட்ட அலுவலர் (மாற்றுத்திறனாளி உரிமை திட்டம்) அழகுமன்னன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.