ADDED : ஆக 19, 2026 11:11 PM
சிங்கம்புணரி: மதுரை மாவட்டம் கீழவளவு ராகவன் 53. ஆக.18ல் சதுர்வேதமங்கலம் அருகே காப்புக்காட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் விசாரணையில், சிங்கம்புணரியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
ராகவன் மீன் வியாபாரம் செய்து வந்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த போது விபத்தில் கால் முறிந்ததால் திருமணம் தடைபட்டது. பிறகு போதைக்கு அடிமையாகி சிறுவர்களுக்கு மது வாங்கி கொடுத்து அவர்களை ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்தியுள்ளார். ஆக.17 இரவு சிங்கம்புணரி பகுதி சிறுவர்கள் இருவரை சதுர்வேதமங்கலம் காப்பு காட்டுக்கு அழைத்துச் சென்று மதுகுடிக்க வைத்து ஓரினச்சேர்க்கைக்கு முயன்றுள்ளார். தகராறில் சிறுவர்கள் ராகவனை கல்லால் தாக்கி கொலை செய்து ரூ.25,000 பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். கைதான சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.
