தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்   

மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்   

மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்   


ADDED : செப் 28, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 04:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை, செப்.

29-மக்கள் தொகை கணக்கெடுப்பில் மாற்றுத்திறனாளிகள் குறித்த முழுவிபரம் இடம் பெற வலியுறுத்தி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027 பிப்.,ல் துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தில் மாற்றுத்திறனாளி என்று மட்டுமே இருக்கிறது. அதே நேரம் 21 விதமான பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளை தனித்தனியாக கணக்கெடுக்க வேண்டும். அதே போன்று பிற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் ரூ.1,200 மட்டுமே வழங்குகின்றனர். இவ்விரு கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். செயலாளர் கொங்கையா முன்னிலை வகித்தார். மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பங்கேற்றனர். /

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us