/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் கல்விக்கடன் ரூ.6.83 கோடி வழங்கல்
/
சிவகங்கையில் கல்விக்கடன் ரூ.6.83 கோடி வழங்கல்
ADDED : பிப் 16, 2024 05:20 AM

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று நடந்த மெகா கல்வி கடன் வழங்கும் விழாவில், 171 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வங்கி கடனுதவி தொகை ரூ.6.83 கோடியை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.
மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கி சார்பில் சிவகங்கையில் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச் சந்திரன் முன்னிலை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் வரவேற்றார்.
கலெக்டர் பி.ஏ., (வளர்ச்சி) அன்பு, இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் முருகப்பன், ஸ்டேட் பாங்க் முதுநிலை மேலாளர் பாஸ்கரன் பங்கேற்றனர்.
முகாமில் ஆன்லைன் மூலம் பொறியியல், மருத்துவ படிப்பிற்காக கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்த 171 மாணவர்களுக்கு ரூ.6.83 கோடி கடன் உத்தரவை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.
தொடர்ந்து முகாமில், கல்வி கடன் கேட்டு வந்த மாணவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. பாங்க் ஆப் பரோடா வங்கி முதுநிலை மேலாளர் முத்துச்சாமி நன்றி கூறினார்.