தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பயணிகளை ஏற்றுவதில் போட்டி; ஊழியர்களிடையே தகராறு

பயணிகளை ஏற்றுவதில் போட்டி; ஊழியர்களிடையே தகராறு

பயணிகளை ஏற்றுவதில் போட்டி; ஊழியர்களிடையே தகராறு


ADDED : ஜூன் 17, 2025 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்; தனியார் பஸ்களில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி சண்டையிட்டனர்.

பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து மதுரைக்கு திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நேற்று பரமக்குடியில் இருந்து மாலை 4:00 மணிக்கு கிளம்பிய தனியார் பஸ் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி சென்றது. பின்னால் கிளம்பிய மற்றொரு தனியார் பஸ்சில் போதிய பயணிகள் இல்லை. எனவே முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றுள்ளது. முந்த விடாமல் இடைமறித்து பஸ் சென்றது.

டி.பாப்பாங்குளம் பைபாஸ் ரோட்டில் இரு பஸ்களையும் ரோட்டில் நிறுத்தி பஸ் ஊழியர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். திருப்புவனம் போலீசார் இரு பஸ்களையும் திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனிற்கு கொண்டு வந்தனர். பயணிகளை அடுத்தடுத்து வந்த பஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us