/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாய் தண்ணீர் திறந்து விடுவதில் கிராமங்கள் இடையே பிரச்னை
/
கண்மாய் தண்ணீர் திறந்து விடுவதில் கிராமங்கள் இடையே பிரச்னை
கண்மாய் தண்ணீர் திறந்து விடுவதில் கிராமங்கள் இடையே பிரச்னை
கண்மாய் தண்ணீர் திறந்து விடுவதில் கிராமங்கள் இடையே பிரச்னை
ADDED : ஜன 05, 2025 06:51 AM

தேவகோட்டை :   தேவகோட்டை தாலுகா முப்பையூரில்  பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய கண்மாய்  உள்ளது.
இந்த கண்மாய் தண்ணீர் மூலம் முப்பையூர், ராயர்பட்டினம், கீழக்கோட்டை, காக்காச்சியேந்தல் உட்பட எட்டு குக்கிராமங்களை சேர்ந்த 300 ஏக்கர் நஞ்சை வயலும், 950 ஏக்கர் புஞ்சை வயலும் பாசன வசதி பெறுகிறது.
ஏற்கெனவே  பெய்த மழையில் இந்த கண்மாய் நிரம்பி நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் கண்மாயின் மறுபுறத்தில் உள்ள வாயுளானேந்தல் வெட்டி வயல் உட்பட சில கிராமத்தினர்  முப்பையூர் கண்மாயில் உள்ள தண்ணீர் தங்கள் வயல்களில் நிரம்பி நெற்பயிர் சாய்ந்து விட்டதாகவும், முப்பையூர் கண்மாயில் தண்ணீரை திறந்து விடுமாறு சிவகங்கை சென்று கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து  வருவாய்த் துறையினர் கண்மாய் தண்ணீரை திறந்து விடுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். நேற்று தண்ணீர் திறந்து விடுவதற்கான பணிகள் நடந்தன. இதற்கு முப்பையூர் உட்பட எட்டு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்ய முயன்றனர்.
பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கிறிஸ்டினா இமாகுலேட் சம்பந்தப்பட்ட கண்மாய் பகுதிக்கு வந்தார். அவரிடம் தாசில்தார் சேதுநம்பு, இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினர். சருக்கை அளவு தண்ணீரை தேக்கி வைக்க முப்பையூர் ஊராட்சியினருக்கு உரிமையுண்டு.
இன்னும் ஒரு அடி தண்ணீர் தேக்கலாம் என்று கூறிவிட்டார்.  இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கிராமத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மனிதாபிமானத்துடன் சிறிது தண்ணீர் திறந்து விடுமாறு பேசினர்.
சமாதானத்திற்கு பின் தாசில்தார் சேதுநம்பு திறந்து விட கோரிக்கை வைத்த கிராமத்தினரை பேச சொல்வதாகவும், தண்ணீர் திறந்து விடுங்கள் என்றும் சமரசம் செய்தார். கிராமத்தினர் ஏற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.

