/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் ஜாதி தலைவர்கள் பிளக்ஸ் போர்டு வைப்பதில் தகராறு: 2 போலீசார் உட்பட 5 பேர் காயம்

ADDED : நவ 04, 2025 01:55 AM
இளையான்குடி:  இளையான்குடி அருகே இளமனுார் பஸ் ஸ்டாப்பில் ஜாதி தலைவர்கள் பிளக்ஸ் போர்டு வைப்பதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. 2 போலீசார் உட்பட 5 பேர் காயமடைந்தனர், இருதரப்பினரும் மறியலில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இளமனுார் பஸ் ஸ்டாப் அருகில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களது சமூக தலைவர் படத்துடன் கூடிய பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். இதற்கு கடந்த சில மாதங்களாக  மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த சமூகத்தினர் நேற்று காலை அப்பகுதியில் புதிதாக தங்களது சமூகத்தை சேர்ந்த தலைவர் படத்துடன் கூடிய பிளக்ஸ் போர்டை வைத்த போது இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.
புதிதாக வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டை சேதப்படுத்தினர். இந்த மோதலில் புதிதாக பிளக்ஸ் போர்டு வைத்த  சமூகத்தை சேர்ந்த 3 பேருக்கும், 2 போலீசாருக்கும் காயமேற்பட்டு பரமக்குடி, இளையான்குடி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அகற்றப்பட்ட பிளக்ஸ் போர்டுக்கு பதிலாக புதிய பிளக்ஸ் போர்டு மீண்டும் நேற்று காலை வைக்கப்பட்டது. பிளக்ஸ் போர்டு வைத்த சமூகத்தை சேர்ந்தவர்களும், புதிதாக பிளக்ஸ் போர்டு வைக்க கூடாது என ஏற்கனவே பிளக்ஸ் போர்டு வைத்த சமூகத்தை சேர்ந்தவர்களும் பரமக்குடி ராமநாதபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது.
சிவகங்கை எஸ்.பி., சிவப்பிரசாத், இளையான்குடி தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.