ADDED : ஜூலை 04, 2026 05:46 AM

திருப்புவனம்: மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையில் பராமரிப்பு பணி முறையாக நடக்காததால் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்.
மதுரையில் இருந்து 76 கி.மீ., துாரமுள்ள பரமக் குடி வரை நான்கு வழிச் சாலையாக 2015ல் மாற்றப் பட்டு வாகனப்போக்கு வரத்து நடந்து வருகிறது. சாலை அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில் பல இடங்களில் சாலை சேதமடைந்து அடிக்கடி விபத்து நேரிட்டு வந்தன.
இதனையடுத்து மதுரையில் இருந்து பரமக்குடி வரை 90 கோடி ரூபாய் செலவில் சாலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. பல இடங்களில் சாலை கீறப்பட்டு தார், ஜல்லிக்கற்கள் பெயர்த்து எடுத்து புதிய சாலை அமைக்கப்பட்டு வருகின்றன.
சாலையை முழுமையாக கீறி புதிய சாலை அமைக்காமல் குறைந்த அளவு மட்டுமே சாலை அமைக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். பல இடங்களில் சாலைகள் கீறப்பட்டு அப்படியே மாதக்கணக்கில் புதிய சாலை அமைக்காமல் இருப்பதால் டூவீலர்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து காயமடை கின்றனர். இணைப்பு சாலை பகுதியில் குறிப்பிட்ட தூரம் மட்டும் சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
மாரநாடு பாலம், லாடனேந்தல் பைபாஸ் உள்ளிட்ட இடங்களில் சாலை பணிகள் முழுமையடையவில்லை. சாலை புதுப்பிக்கும் பணி முடிவடைந்த இடங்களில் சாலையோரத்தின் உயரத்தை அதிகரிக்க செம்மண், கிராவல் மண் கொண்டு நிரப்ப வேண்டும், இன்று வரை சாலை யோரம் மண் கொட்டப் படவே இல்லை.
