நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் பாபா அமீர்பாதூஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாணக்யா செஸ் அகாடமி மற்றும் பாபா அகாடமி இணைந்து மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடத்தினர்.
தாளாளர் பாபா அமீர்பாதூஷா தலைமை வகித்தார். முதல்வர் வரதராஜன் வரவேற்றார். சிவகங்கை மாவட்ட சதுரங்கக்கழக இணைச் செயலாளர் ராமு, எஸ்.ஐ. லதா போட்டியைத் துவக்கினர். போட்டியில் வென்றவர்களுக்கு மாவட்ட சதுரங்க கழக கூடுதல் செயலாளர் பிரகாஷ் மணிமாறன் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் பரிசுகளை வழங்கினார்.

