
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் தேசிய சதுரங்க தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில சதுரங்க கழக இணை செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். ரோட்டரி பியர்ல்ஸ் சங்க நிறுவனர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட சதுரங்க கழக இணை செயலாளர் ராமு, திருவாடனை சதுரங்க கழக செயலாளர் கார்த்திகேயன் வாழ்த்தினர்.
செட்டிநாடு சதுரங்க கழக தலைவர் ஜெயங்கொண்டான் வரவேற்றார். செயலாளர் பிரகாஷ் மணிமாறன் நன்றி கூறினார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.