ADDED : செப் 27, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை, செப்.28– -
மானாமதுரையில் மாவட்ட செஸ் கழகம், லக்கி செஸ் அகாடமி, செயின்ட் ஜோசப் நர்சரி பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. பிரபு வரவேற்றார். மாவட்ட செஸ் கழக கூடுதல் செயலாளர் பிரகாஷ் மணிமாறன், செயலாளர் நாகராஜன், தாலுகா செயலாளர் செல்லபெருமாள் முன்னிலை வகித்தனர். மாநில இணை செயலாளர் கண்ணன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். மானாமதுரை வட்டார செஸ் கழக தலைவர் சத்தியேந்திரன் நன்றி கூறினார்.
///
