ADDED : ஜன 06, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காளையார்கோவில்: காளையார்கோவிலில் வட்டார காங். பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி தலைமை வகித்தார்.
வட்டார தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி முரளிதரன், காமராஜ் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர் செல்வி, சிவகங்கை நகராட்சி கவுன்சிலர் மகேஷ்குமார் பங்கேற்றனர். கூட்டத்தில் காங்., கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றினர்.