ADDED : அக் 05, 2024 04:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. தலைவர் பொன்மணி பாஸ்கரன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி செயலர் கலைச்செல்வராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சரஸ்வதி, மாவட்ட கவுன்சிலர்கள் கருப்பையா, ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் கட்ட, ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன் ஒதுக்கப்பட்டுள்ள இடம் குறித்து ஆலோசனை செய்துள்ளனர்.
மேலும், மாவட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு தேவையான செலவின தீர்மானங்களை நிறைவேற்றினர்.