நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரியில் சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் பேச்சு போட்டி நடந்தது.
ஒருங்கிணைப்பாளர்ஜெயபிரகாஷ் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் பேசினார்.
நடுவர்களாக பேராசிரியர்கள் பாரதிராணி ரவிக்குமார் அனிதா பங்கேற்றனர். ஆங்கில பேச்சுப் போட்டி நடுவர்களாக உதவி பேராசிரியர் கனிமொழி பேராசிரியர் சோமசுந்தரம் ஷர்மிளா பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முதல்வர் பெத்தாலட்சுமி மாணவர்களை பாராட்டினார். யோகநாதன் நன்றி கூறினார்.