/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் மாவட்ட தொழில் மைய கண்காணிப்பாளர் தற்கொலை முயற்சி
/
சிவகங்கையில் மாவட்ட தொழில் மைய கண்காணிப்பாளர் தற்கொலை முயற்சி
சிவகங்கையில் மாவட்ட தொழில் மைய கண்காணிப்பாளர் தற்கொலை முயற்சி
சிவகங்கையில் மாவட்ட தொழில் மைய கண்காணிப்பாளர் தற்கொலை முயற்சி
ADDED : ஏப் 26, 2025 03:03 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்ட தொழில் மைய அலுவலக வளாகத்தில் கண்காணிப்பாளர் பொன்மதி 42, கரப்பான் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் சசிக்குமார் மனைவி பொன்மதி 42. இவர் சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிகிறார். அதே அலுவலகத்தில் உதவி பொறியாளராக பிரசன்னகுமார், டிரைவராக சிவமுருகன் பணிபுரிகின்றனர். சில நாட்களுக்கு முன் உதவி பொறியாளர், கண்காணிப்பாளர் இடையே அலுவலகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. டிரைவர் சிவமுருகன், உதவி பொறியாளருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
மேலும் வாக்குவாதம் தொடர்பாக கண்காணிப்பாளர் பேசிய விஷயங்களை உதவி பொறியாளர் வீடியோவாக எடுத்து சிறு, குறு தொழில் துறை கமிஷனர் நிர்மல்ராஜிற்கு அனுப்பினார். கண்காணிப்பாளர் பொன்மதியும், உதவி பொறியாளர் குறித்து புகார் எழுதி தபாலில் கமிஷனருக்கு அனுப்பினார். இந்நிலையில் கண்காணிப்பாளர் பொன்மதியை தற்காலிக பணிநீக்கம் செய்து கமிஷனர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார்.
இந்த பணிநீக்க உத்தரவை வழங்க மண்டல அலுவலகத்தில் இருந்து அலுவலர் ஒருவர் நேற்று சிவகங்கை மாவட்ட தொழில் மையத்திற்கு வந்திருந்தார். இதை அறிந்த பொன்மதி நேற்று காலை 11:30 மணிக்கு தன்னிடம் விசாரணையும் செய்யாமல் பணிநீக்கம் செய்யலாமா எனக்கேட்டு அலுவலகத்தில் இருந்த கரப்பான்பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

