/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்ட பேச்சு போட்டி: மாணவர்களுக்கு பரிசு
/
மாவட்ட பேச்சு போட்டி: மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஆக 26, 2025 03:46 AM

சிவகங்கை: பள்ளி,கல்லுாரி மாணவர்களுக்கு நடந்த மாவட்ட அளவிலான பேச்சு போட்டி யில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு கலெக்டர் பொற்கொடி பரிசு , சான்று வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணாத்துரை,ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி மாவட்ட அளவில் நடந்தது.
பள்ளி மாணவர்கள் பேச்சு போட்டி: முதலிடம் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி 9ம் வகுப்பு மாணவி தர்க்கா தேவி.
இரண்டாம் பரிசு: காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி 6 ம்வகுப்பு மாணவர் சிவவைணவின்.
மூன்றாம் பரிசு: சூராணம் புனித ஜேம்ஸ் மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மாணவி கீர்த்தனா பெற்றனர்.
கல்லுாரி மாணவர்களுக்கு முதலிடம்: காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லுாரி மாணவர் ஹரிசங்கர்.
இரண்டாம் பரிசு: அழகப்பா பல்கலை பி.எட்., கல்லுாரி மாணவர் லெனின்குமார்.
மூன்றாம் பரிசு: அழகப்பா அரசு கல்லுாரி மாணவி மாதரசி பெற்றனர்.
ஈ.வெ.ரா., பிறந்த நாள் விழா பேச்சு போட்டி பள்ளி மாணவர்கள் பிரிவில் முதலிடம்: மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி 8ம் வகுப்பு மாணவி ஹர்ஷினி.
இரண்டாம் பரிசு: ஏ.முறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி அழகேஸ்வரி.
மூன்றாம் பரிசு: சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி பிளஸ் 1 மாணவி கீர்த்திமாலி. கல்லுாரி மாணவர் பிரிவில் முதல் இடம் காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரி மாணவி சார்மதி.
இரண்டாம் பரிசு: அழகப்பா பல்கலை பி.எட்., கல்லுாரி மாணவர் லெனின் குமார்
மூன்றாம் பரிசு: அரசனுார் பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி மாணவி முத்துச்செல்வி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 காசோலை மற்றும் பாராட்டு சான்றினை கலெக்டர் பொற்கொடி வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதா லட்சுமி உடனிருந்தார்.